சென்னை அயனாவரத்தில் திருமணமான 6-வது மாதத்தில் பெண் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
அயனாவரம் குருவப்ப தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.திருமணமான சிறிது நாட்களிலேயே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போடுவார்களாம். இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவும் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தனலட்சுமி வீட்டில் மர்மான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதைப் பார்த்த மாரியப்பன் அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து தகவலறிந்த அயனாவரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இச் சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.